மகிந்தவை விட அதிக பாதுகாப்பு அநுரவுக்கு..! தொடரும் விமர்சனங்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிக பாதுகாப்பை பயன்படுத்துவதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு இன்றும் அதிகமான அச்சுறுத்தல்கள் உள்ளன.
ஜனாதிபதிக்கு கூடுதல் பாதுகாப்பு
அவருக்கு மிகவும் கடுமையான பாதுகாப்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், அரசாங்கம் அதனை தடுத்தது.
தற்போது, மகிந்த ராஜபக்சவை விட அநுரகுமார திஸாநாயக்க அதிக பாதுகாப்பைப் பயன்படுத்துகின்றார்.
இவ்வாறிருக்க, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு போதாது என்றும் கூடுதல் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் லால்காந்த எந்த வெட்கமும் இல்லாமல் கூறியுள்ளார்.
போலி கருத்துக்கள்
இதேவேளை, நெடுஞ்சாலைகள் கட்டும் பணியை மீண்டும் சீனாவிற்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஜனாதிபதி, எதிர்க்கட்சியில் இருந்த போது, சீனா உடனான ஒப்பந்தங்களை விமர்சித்துவிட்டு, தற்போது சீனாவுடன் மீண்டும் வணிகம் செய்ய முடிவு செய்தது விதியின் நகைச்சுவை.
வாக்காளர்களை மகிழ்விப்பதற்கும் அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கும் அவர் கூறிய கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா



