அநுரவின் கட்சி எம். பி கல்வித்தகைமை: முன்மொழிவை சமர்ப்பிக்கவுள்ள ஜீவன்
தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க ஒரு தெரிவுக்குழுவை அமைக்கும் முன்மொழிவை சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் புதிய ஜனநாயக முன்னணி (NDF)என்பன தீர்மானித்துள்ளன.
இது தொடர்பான பிரேரணை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.
ஜீவன் தொண்டமான்
தேசிய மக்கள் சக்தியின் சில பிரதிநிதிகளுடைய கல்விதரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டே, நுவரெலியாவில் இருந்து நாடாளுமன்றுக்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 17 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri
