அநுரவின் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு
மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவே தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) ஆட்சியில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று அந்த கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நலிந்த ஜயதிஸ்ஸ (Nalintha Jayatissa) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு
அவர் மேலும் கூறியதாவது, "அரசியலமைப்புஎன்பதை பலவந்தமாகத் திணிக்க முடியாது. அது தொடர்பில் மக்கள் மத்தியில் கலந்துரையாடல் மற்றும் மக்களின் ஆதரவு அவசியம்.
எனினும் இலங்கையில் சோல்பரி யாப்பு, 72 குடியரசு யாப்பு மற்றும் 78 இல் புதிய அரசியலமைப்பு என்பன மக்களிடம் முறையாகக் கலந்துரையாடப்படாமல் கொண்டுவரப்பட்டவையாகும்.

தென்னாபிரிக்காவில் அரசியலமைப்பு முன்வைக்கப்பட்டபோது மக்களிடம் பரந்துபட்டளவில் கலந்துரையாடப்பட்டது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை
மன்னர் ஆட்சி நடைபெற்ற நேபாளத்தில் கூட மக்கள் விருப்பத்துக்கமையவே புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது.
எனவே, அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் முதலாவது நாடாளுமன்ற ஆட்சிக் காலத்துக்குள் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்படும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி, நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தைப் பகிரும் யோசனையும் உள்ளது" என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam