அமெரிக்கா செல்லும் அநுரவின் குழு
அமெரிக்காவினால் இலங்கை ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரியை மேலும் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட, உயர்மட்டக் குழுவொன்று அமெரிக்காவுக்குப் புறப்பட உள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தக அமைச்சின் செயலாளர் விமலேந்திரராஜா, ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மகிந்த சமரசிங்க ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறவுள்ளனர்.
இந்த முயற்சி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய வரி கடிதத்துக்கு பின்னர், வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.
திருத்தப்பட்ட வரி வீதம்
திருத்தப்பட்ட வரி வீதம் எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.
திருத்தப்பட்ட வரி வீதம் எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
