ஜே.வி.பியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் அனுர
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அந்த பதவியில் இருந்து விலக உள்ளதாக தெரியவருகிறது.
புதிய தலைவர் பிமல் ரத்நாயக்க

இதனையடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவராக பிமல் ரத்நாயக்க நியமிக்கப்படுவார் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் தேசிய மக்கள் சக்தியின் தலைவராக செயற்படுவார் என கூறப்படுகிறது.
ரில்வின் சில்வாவுக்கு பதிலாக விஜித ஹேரத்

அதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, அந்த பதவியில் இருந்து விலக உள்ளதுடன் பிரதான செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நியமிக்கப்பட உள்ளார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் பின்னர் விஜித ஹேரத் பிரதான செயலாளராக நியமிக்கப்படுவார்.
அத்துடன் அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri