நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அநுரகுமார பகிரங்க எச்சரிக்கை
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்று ஒன்றரை மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி 150ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க எவ்வளவு சொன்னாலும், சஜித் பிரேமதாச எத்தனை பொய்யான கதைகளைச் சொன்னாலும் எம்மை தோற்கடிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “ரணில் விக்ரமசிங்கவின் கதைகளை பொருட்படுத்த தேவையில்லை. விரைவில் நாடாளுமன்றத்தை கலைப்போம்.
ஒன்றரை மாதத்தில் பொதுத்தேர்தல்
இந்த நாடாளுமன்றத்தில் அநாகரீகமான அலறல் சத்தங்கள் கேட்கின்றன. கொலை செய்து சிறை சென்ற குற்றவாளிகள், கப்பம் வாங்கி சிறை சென்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறியுள்ளது.
இப்படி ஒரு நாடாளுமன்றம் தேவையா? இன்னும் ஒன்றரை மாதத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும். தற்போதைய நாடாளுமன்றத்தில் 150ற்கும் மேற்பட்டவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
குறிப்பாக நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் சஜித்தால் பிரதி அடிக்கப்பட்டவர்கள்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |