நயினாதீவு விகாராதிபதியை சந்தித்தார் அநுர
நயினாதீவு விகாராதிபதியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
நயினாதீவு விகாராதிபதி
குறித்த சந்திப்பானது இன்றையதினம்(15) இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் , இன்றைய தினம் ஜனாதிபதி விகாரதிபதியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
அதேவேளை , தையிட்டி விகாரை பொறுப்பை தன்னிடம் தந்தால் , விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் தனியார் காணிகளுக்கு மாற்றீடாக , தையிட்டி விகாரைக்கு சொந்தமான காணிகளில் மாற்று காணிகளை வழங்கி தையிட்டி விகாரை பிரச்னைக்கு தீர்வு வழங்க தயார் என அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்துடன் , தையிட்டி பகுதிக்கு நேரில் சென்று , பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை நேரில் சந்தித்தும் நயினாதீவு விகாராதிபதி கருத்துக்களை தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri