ஜனாதிபதி அநுர தொடர்பான காணொளி குறித்து வெளியான தகவல்
வெலிக்கடை சிறைச்சாலையின் சமையலறையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளி போலியானது என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கோ அல்லது வேறு எந்த சிறைச்சாலைக்கோ கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை கண்காணிப்பு
சிறைச்சாலைகளில் பதிவு செய்தாலோ அல்லது காட்சிகளை எடுத்தாலோ, சிறைத் தலைமையகத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகளை பெறுவதற்கு எந்தவொரு ஊடக நிறுவனமும் அனுமதி பெறவில்லை எனவும், படப்பிடிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
