ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரவின் கொள்கை மையம் திறந்து வைக்கப்பட்டது
கடந்த தேர்தல்களை விட வேட்பாளர்களின் கொள்கைகள் மீது மக்கள் அதிக கரிசனையுடன் இருப்பதால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கைகள் முக்கிய பங்கு வகிக்கும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கை மையத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பேசிய அவர், நாட்டில் கொள்கைகள் மற்றும் அறிக்கைகள் அந்தந்த துறைகளில் உள்ள நிபுணர்களை கலந்தாலோசிக்காமல் கடந்த காலத்தில் தயாரிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தினார்.
எனினும், தேசிய மக்கள் சக்தி, தனது கொள்கைகள் தொடர்பில் கடந்த ஒன்றரை வருடங்களாக நிபுணர்களுடன் கலந்துரையாடியதாக திஸாநாயக்க கூறியுள்ளார்.
தேர்தல் சட்டங்கள்
அத்துடன், கொள்கைகளில் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் பங்களிக்க ஆர்வமுள்ள எந்தவொருவருக்கும் புதிதாக திறக்கப்பட்டுள்ள கொள்கை மையம் ஒரு தளத்தை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி, தனது தேர்தல் கண்காணிப்பு மையத்தை ஆரம்பிப்பதாக கூறிய அவர், அது தேர்தல் சட்டங்களை மீறுவது மற்றும் தேர்தல் தொடர்பான சம்பவங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
'AKD.lk' இணையத்தளத்தையும் திஸாநாயக்க ஆரம்பித்து வைத்ததுடன், மக்கள் தம்முடன் நேரடியாக தொடர்புக்கொள்வற்கு அது உதவும் என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
