அரசாங்கத்துக்கு எதிராக 30ஆம் திகதி வெடிக்கவுள்ள போராட்டம்
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று24.11.2026) தனது 58ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இந்நிலையில் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ளன. ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளில் 60வீதமானவை நிறைவேற்றியுள்ளதாக வில தகவல்கள் கூறுகின்றன.
இதுஇவ்வாறிருக்க கடந்த சில நநாட்களுக்கு முன்னர் அடுத்த ஆ்ண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் ஒதுக்கப்பட்டது.
குறித்த 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் தாம் எதிர்பார்த்த நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. எனவே தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கத் தவறினால், எதிர்வரும் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாரிய பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கப் போவதாகப் பல தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதேவேளை, 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர், அதிபர் மற்றும் சுகாதாரத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் ஏனைய பல அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் துறைகளும் இந்தப் போராட்டத்தில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி....