அனுரவுக்கும் நோர்வே தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு
புதுடில்லியில் உள்ள நோர்வே தூதுவர் மே - எலின் ஸ்டெனர் (May - Elin Stener) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்று (02.05.2024) பிற்பகல் ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இந்த ஆண்டு இலங்கையில் நடைபெற உள்ள தேர்தல் குறித்தும் இரு தரப்புக்களும் ஆலோசனை நடத்தியுள்ளன.
மேலும் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ஜோன் பிஜெர்கெம் (John Bjerkem )மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜித ஹேரத் மற்றும் ஹரினி அமரசூரிய ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |