முன்னாள் ஜனாதிபதி - அவர் மனைவி என பலர் சிறை செல்லலாம்..! மிக முக்கிய தீர்ப்பு தொடர்பில் அநுரவின் அதிரடி அறிவிப்பு

Nuwara Eliya Anura Kumara Dissanayaka May Day
By Benat May 01, 2026 08:58 AM GMT
Report

இந்த மாதத்தில் மிக முக்கிய  நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த தினங்களில் அந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படவிருந்தது. எனினும், அந்தத் தீர்ப்பு இந்த மாதத்தில் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திறைசேரி அதிகாரியின் மர்ம மரணம்! உடலில் பல வெட்டுக்காயங்கள் - வெளியான தகவல்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திறைசேரி அதிகாரியின் மர்ம மரணம்! உடலில் பல வெட்டுக்காயங்கள் - வெளியான தகவல்

இந்த வருடம் அதிகளவானோர் சிறை செல்வர் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வரலாற்றில் முதன்முறையாக, இந்த 2026ஆம் ஆண்டு, நாட்டில் இதுவரை நடந்த மோசடிகளுடன் தொடர்புடைய ஊழல்வாதிகள், திருடர்கள், மோசடிக்காரர்களை உள்ளிட்ட அதிகளவானவர்கள் சிறைக்கூடத்திற்குச் செல்லும் ஆண்டாக இருக்கும். இந்த மே மாதத்தில் ஆயிரம் பேருக்கான விசாரணை நடைபெறவுள்ளது.


நேற்று ஒரு வழக்கிற்கான தீர்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கு தீர்ப்பு மே மாதம் வருகின்றது.

ஊழல்வாதிகள், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்கள் என மோசடிக்காரர்கள் சிறைக்குச் செல்லப் போகின்றார்கள். எனவே பல அரசியல்வாதிகள் பயப்படுகின்றார்கள். அவர்கள் குழப்பமடையவில்லை என்றால்தான் ஆச்சரியம்.

பரம்பரை ஜனாதிபதியாக இருக்கலாம், பரம்பரை பிரதமராக இருக்கலாம், முன்னாள் ஜனாதிபதியாக, முன்னாள் பிரதமராக இருக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி - அவர் மனைவி என பலர் சிறை செல்லலாம்..! மிக முக்கிய தீர்ப்பு தொடர்பில் அநுரவின் அதிரடி அறிவிப்பு | Anura Kumara May Day Speech Nuwara Eliya

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி, மகன் மற்றும் மருமகன் என யாராக வேண்டுமாகவும் இருக்கலாம். சட்டம் அனைவருக்கும் சமம். சிறைக்குச்செல்ல வேண்டியவர்கள் சிறைக்குச் செல்வார்கள்.

இலங்கையில், பலமானதும், அனைத்து மக்களினதும் நம்பிக்கையைப் பெற்ற அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும். மலையகத்தில் இருக்கின்ற இலட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை எமது அரசாங்கம். வடக்கு மற்றும் கிழக்கு, தெற்கு உள்ளிட்ட அனைத்து மக்களின் நம்பிக்கையையும் பெற்றது எமது அரசாங்கம். இது மக்களின் அரசாங்கமாகும்.

முன்னாள் ஜனாதிபதி - அவர் மனைவி என பலர் சிறை செல்லலாம்..! மிக முக்கிய தீர்ப்பு தொடர்பில் அநுரவின் அதிரடி அறிவிப்பு | Anura Kumara May Day Speech Nuwara Eliya

வேலை செய்யும் மக்களின் சிறந்த வருமானத் திட்டம், வீட்டுத்திட்டம், பிள்ளைகளின் கல்வி நாங்கள் ஆட்சிக்கு வந்த பிற்பாடு இரண்டு தீர்மானங்களை எடுத்திருந்தோம். ஒன்று, மக்களுக்கான நன்மை பயக்கும் தீர்மானம், இரண்டாவது ஆட்சியாளர்களினதும், ஏனைய அரசியல்வாதிகளினதும் வரப்பிரசாதங்களை நிறுத்துகின்ற தீர்மானமாகும்.

ஏனைய அரசாங்கங்கள், ஆட்சியாளர்களின் வரப்பிரசாதங்களை அதிகரிக்கும் தீர்மானங்களை மேற்கொண்டிருந்தனர். மக்களுக்கு வேதனையும், சுமைகளையும் அதிகரிக்கும் தீர்மானங்களை கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருந்தனர். ஆனால், எமது அரசாங்கம் மக்களின் வளர்ச்சியில் பங்கு கொள்ளும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. இதுதான் உழைக்கும் மக்களின் அரசாங்கமாகும்.

வரலாற்றில் முதன்முறையாக, உழைக்கும் மக்களுக்காக உழைப்பதற்கென்று நாம் ஒரு அரசாங்கத்தை உருவாக்கியிருக்கின்றோம். மலையக மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை நாங்கள் எடுத்துள்ளோம். அதற்கு காரணம், நாம் மக்களோடு இருக்கின்றோம்.

டித்வா சூறாவளி ஏற்பட்டபோது, விவசாய நிலங்கள், கால்நடைகள் என அனைத்தும் அழிவுக்கு உள்ளாகியது. விவசாயிகள், மீனவர்கள் என அனைவருமே மிகப்பெரியதொரு பாதிப்பை எதிர்நோக்கினர். இவ்வாறு பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு, இலங்கை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில், அதிக நட்ட ஈட்டுத் தொகையை நாங்கள் வழங்கியிருந்தோம்.

முன்னாள் ஜனாதிபதி - அவர் மனைவி என பலர் சிறை செல்லலாம்..! மிக முக்கிய தீர்ப்பு தொடர்பில் அநுரவின் அதிரடி அறிவிப்பு | Anura Kumara May Day Speech Nuwara Eliya

சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகள், சேதத்தை எதிர்நோக்கியுள்ள வீடுகள் அனைத்திற்கும் 50 இலட்சம் ரூபா வரை இழப்பீட்டுத் தொகையை வழங்க தீர்மானத்திருந்தோம். சிறிய சேதங்களுக்கும் 5 இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்கத் தீரமானித்திருந்தோம்.

பாடசாலை மாணவர்களுக்கு அவர்களுக்கு கல்வி சார் பொருட்கள் சேதமடைந்திருந்தால் அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கத் தீர்மானித்திருந்தோம். ஏனென்றால் இது உழைக்கும் மக்களுக்காக உழைக்கும் அரசாங்கம்.

மத்தியக் கிழக்கில் பாரிய யுத்தம் ஒன்று சமகாலத்தில் மூண்டது. இதனால், எம்மால் சமாளிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் விலை உயர்வடைந்தது. சமாளிக்க முடியாத அளவில், எரிசக்தி விலைகள் அதிகரித்தன.

ஆனால், உழைக்கும் மக்களின் அரசாங்கமாக, டீசல் லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் நிவாரணத்தை நாம் வழங்கினோம். இன்று ஒரு லீட்டர் டீசலின் விலை 382 ரூபாவாகும். நூறு ரூபா நிவாரணத்தினை நாம் வழங்காமலிருந்தால் இன்று டீசலின்விலை 482 ரூபாவாக இருந்திருக்கும்.

முன்னாள் ஜனாதிபதி - அவர் மனைவி என பலர் சிறை செல்லலாம்..! மிக முக்கிய தீர்ப்பு தொடர்பில் அநுரவின் அதிரடி அறிவிப்பு | Anura Kumara May Day Speech Nuwara Eliya

உரத்தின் விலை அதிகரித்தது. விவசாயிகள் கடும் சிரமத்தினை எதிர்நோக்கும் போது 10 ஆயிரம் ரூபா நிவாரணத்தினை வழங்க நாங்கள் தீர்மானித்தோம். கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் நிவாரணத்தினை வழங்க தீர்மானித்திருந்தோம்.

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளில் இருந்து மீள்வதற்கு நாம் 50 ஆயிரம் கோடி ரூபாவினை ஒதுக்கியிருந்தோம். இது சாதாரண தொகை அல்ல. வீடுகளை நிர்மாணிக்க, பாடசாலைகளை நிர்மாணிக்க என்று பாதிக்கப்பட்ட அனைத்தையும் மீளக் கட்டியெழுப்பவென இந்த நிதியை நாம் ஒதுக்கியிருந்தோம்.

நாம் எதிர்பாராத வகையில் பாரிய யுத்தம் மூண்டது. உடனடியாக நாடாளுமன்றத்தில் நாம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு, யுத்தத்தின் காரமணாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10 ஆயிரம் கோடி ரூபா நிதியை நாம் ஒதுக்கியிருக்கின்றோம். இது மக்களுக்காக வேலை செய்யும் அரசாங்கம்.

இந்த அரசாங்கத்தோடு பயணிக்க நீங்கள் தயாரில்லையா, மக்கள் அரசாங்கத்தோடு இருக்கின்றார்கள். ஆனால், ஒரு கூட்டம் இருக்கின்றது. 10-15 பேர் வீதிக்கு இறங்கி, அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரத்தை மேற்கொண்டு, அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்ல சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டுக்குச் சென்று விடுவார்கள். ஒரு முன்னாள் அமைச்சரின் வீட்டில், ஏனைய கட்சிகளின் அரசியல்வாதிகள் இணைந்து கூட்டம் நடத்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப திட்டம் தீட்டுகின்றனர். மறுநாள் மற்றுமொரு முன்னாள் அமைச்சரது வீட்டில் ஒன்று கூடி, அதே திட்டத்தை மீண்டும் தீட்டுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி - அவர் மனைவி என பலர் சிறை செல்லலாம்..! மிக முக்கிய தீர்ப்பு தொடர்பில் அநுரவின் அதிரடி அறிவிப்பு | Anura Kumara May Day Speech Nuwara Eliya

மே தினப் பேரணியை முதலில் கொழும்பில் நடத்துவதற்கு நாங்கள் தீர்மானித்தோம். எனினும், எரிபொருள் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களாலும், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற இடம் கொழும்பில் இல்லாததன் காரணமாகவே நாடு முழுவதும் 21 இடங்களில் மே தினக் கூட்டங்களை நடத்த நாங்கள் முடிவு செய்தோம். இன்று எமது அரசாங்கத்திற்காக கூடும் மக்கள் தொகையில் கால்வாசியைக் கூட எதிர்க்கட்சிகளால் கூட்ட முடியாது.

இலங்கை வரலாற்றில் மிக அதிகளவிலான போதைப்பொருளை நாங்கள் கைப்பற்றியிருந்தோம். இதனால் மக்கள் குழப்பமடையவில்லை. கடந்த கால அரசியல்வாதிகள் குழப்பமடைந்தார்கள்.

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் கைது செய்யப்பட்டபோதும் குழப்பமடைந்தது மக்கள் அல்ல, முன்னாள் அரசியல்வாதிகள். ஏனென்றால், கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுவினர்கள், முன்னாள் அரசியல்வாதிகளினது உதவியாளர்களாகவும், நண்பர்களாகவும், அவர்களால் வளர்த்து விடப்பட்டவர்களாகவும் இருப்பதால் அவர்கள் கைது செய்யப்படும் போது முன்னாள் அரசியல்வாதிகள் குழப்பமடைகின்றனர்.

மேலும், பல குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருக்கின்றனர். பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள். இதன்போது, மக்கள் பயப்படப் போவதில்லை, குழப்பமடையப் போவதில்லை. ஆனால் அரசியல்வாதிகள் பலர் குழப்பமடைவார்கள். அவர்கள் குழப்பமடைய வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி - அவர் மனைவி என பலர் சிறை செல்லலாம்..! மிக முக்கிய தீர்ப்பு தொடர்பில் அநுரவின் அதிரடி அறிவிப்பு | Anura Kumara May Day Speech Nuwara Eliya

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் குழப்பமடையவில்லை. ஆனால் பல அரசியல்வாதிகள் குழப்பமடைந்துள்ளனர்.

இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவினை பலப்படுத்தியிருக்கின்றோம். ஆணைக்குழவின் அலவலகத்திற்குரிய இடம் பற்றாக்குறை என எமக்குக் கூறினர். எனவே முன்னாள் அமைச்சர் ஒருவரது வீட்டினை நாங்கள் அந்த ஆணைக்குழவிற்கு கொடுத்துள்ளோம்.

இப்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், பல அரசியல்வாதிகள் அச்சமடைந்துள்ளனர். அந்த வீட்டுக்கு அடுத்து வரிசையாக அவர்களும் விசாரணைக்கு வருவார்கள். புதிய நீதிமன்றங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர்கள் பலரின் வீடுகளை நீதிமன்றங்களாக மாற்றியமைத்திருக்கின்றோம். அன்று உண்டு, குடித்து மகிழ்ந்திருந்த வீட்டில் இன்று விசாரணைக்காக வரப் போகின்றாரக்ள்.

முன்னாள் சுகாதார அமைச்சர் விசாரணைக்காக நீதிமன்ற கூண்டில் ஏறுகின்றார். அந்தக் கூண்டு, முன்னர் அவர் உண்டு மகிழ்ந்திருந்த வீடு. இதுபோல பல குற்றவாளிகள் வரிசையாக இனிவரும் நாட்களில் நீதிமன்றக் கூண்டுகளை நாட வேண்டிய நிலை ஏற்படும். மக்கள் எமக்குக் கொடுத்த ஆணையை நாங்கள் நிவேற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார். 

காணாமல் போன டொலர்கள்: ஜனவரியிலேயே தோன்றிய அபாய அறிகுறிகள் - வரி செலுத்துவோர் தலையில் விழப்போகும் பேரிடி..!

காணாமல் போன டொலர்கள்: ஜனவரியிலேயே தோன்றிய அபாய அறிகுறிகள் - வரி செலுத்துவோர் தலையில் விழப்போகும் பேரிடி..!

ஈரான் போர்நிறுத்தம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வட அமெரிக்க ஈரானியர்களிடையே பிளவு

ஈரான் போர்நிறுத்தம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வட அமெரிக்க ஈரானியர்களிடையே பிளவு

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US