அநுர குமார திசாநாயக்க கிரேக்கத்தில் முதலீடு- நெருங்கிய சகா கூறுவது என்ன..!
அநுர குமார திசாநாயக்க கிரேக்க நாட்டைச் சேர்ந்த கப்பல் கம்பனியொன்றில் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கலாம் என்று வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
'முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளராக இருந்த துஷித ஹல்லொளுவை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கிரேக்க கப்பல் கம்பனியொன்றில் பாரிய தொகை டொலர் முதலீடொன்றைக் கொண்டிருப்பதாக அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தல்
ஜே.வி.பி. கட்சியின் முன்னாள் மத்திய குழு உறுப்பினரும், அக்கட்சியின் சார்பில் மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான வருண ராஜபக்ச, இது தொடர்பில் காணொளியொன்றின் மூலம் சில விடயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
வருண ராஜபக்சவின் கூற்றுப்படி, கடந்த 2010ம் ஆண்டு ஜே.வி.பி சார்பில் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
அதன் போது அவருக்கு பல்வேறு வர்த்தகர்கள் சார்பிலும் பெரும் தொகைப் பணம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டிருந்தது.
பெரும்பாலும் அவ்வாறான பணத்தொகையை சரத் பொன்சேகாவின் அலுவலகத்துக்குப் பொறுப்பாக இருந்த அநுர குமார திசாநாயக்கவே பொறுப்பேற்றிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னரும் பாரிய தொகைப் பணம் அந்த அலுவலகத்தில் குவிந்திருந்தது.
கிரேக்க கப்பல் கம்பனியொன்றில் முதலீடு
அவற்றை கட்டுக்கட்டாக பொதி செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றார்கள். ஆனால் எங்கே கொண்டு சென்றார்கள்? அதற்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.
அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட பணத்தில் ஒரு தொகைப் பணம் கிரேக்க கப்பல் கம்பனியொன்றில் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அப்போதே எழுந்தது.
அதுகுறித்து ஜே.வி.பி.மத்திய குழுவிலும் விவாதிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அந்த விடயம் கைவிடப்பட்டது.
எனவே துஷித ஹல்லொளுவை முன்வைத்துள்ள குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருக்கலாம் என்றும் வருண ராஜபக்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
