மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் தவறை நாம் சரி செய்வோம்: அநுரகுமார திசாநாயக்க
மலையக தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் இழைக்கப்பட்ட வரலாற்றுத் தவறை நாம் நிச்சயம் சரி செய்வோம், அதற்கான ஆரம்பக்கட்ட வழிகாட்டல் ஹட்டன் பிரகடனம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மலையகம் - 200 ஐ முன்னிட்டு ஹட்டனில் நேற்று (15.10.2023) நடைபெற்ற ஹட்டன் பிரகடனம் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் 1964 இல் கைச்சாத்திடப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் மலையக மக்கள் இந்தியாவுக்கு அனுப்பட்டனர், ஹட்டன் தொடருந்து நிலையத்தில் வைத்துத் தான் தொடருந்துகளில் ஏற்றப்பட்டு தலைமன்னாருக்கு அனுப்பட்டனர்.
மலையக தமிழர்களின் குடியுரிமை
இதனால் ஹட்டன் மண் கண்ணீர் குளமானது. அந்த மண்ணில் இருந்து தான் நாம் உரையாற்றுகின்றோம். 1948 இல் வெள்ளையர்கள் வெளியேறியதும், மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.
7 லட்சத்துக்கு மேற்பட்டோர் குடியுரிமையை இழந்தனர். குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே குடியுரிமை மிஞ்சியது. 1949 இல் இருந்து 2003 வரை குடியுரிமை இல்லாமலேயே பலர் செத்து மடிந்தனர்.
குடியுரிமை கிடைத்தும், அவர்களுக்கு இன்னும் சம உரிமை கிடைக்கப்பெறவில்லை. மலையக தமிழ் மக்களுக்கு தற்போது அனுதாபம் தேவையில்லை, சுயமரியாதையுடன் கூடிய வாழ்க்கை முறைமையே அவசியம்.
அதனையே அவர்கள் கோருகின்றனர். சுயமரியாதை உள்ள பிரஜையாக வாழும் நிலைமையை நாம் உருவாக்குவோம் என அநுரகுமார தெரிவித்துள்ளார்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
