அரசியல்வாதிகளுக்கு பணத்தை வாரி வழங்கிய திட்டமிட்ட குற்றக்கும்பல் : அநுர பகிரங்கம்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தோர், பல அரசியல்வாதிகளுக்கு பல வழிகளில் பெரும் தொகை பணம் வாரி வழங்கியுள்ளனர் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் நேற்று(16) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாதம் மாதம் பணம் பெற்று
தொடர்ந்துரையாற்றிய அவர் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரி அறவிடுவது போல் மாதம் மாதம் பணம் பெற்றுக் கொண்டுள்ளனர்.அத்தோடு சில அமைச்சர்கள் மாதம் மாதம் அவர்களை வீட்டுக்கு அழைத்தும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இவற்றுக்கான அனைத்து தகவல்களும் வெளிவந்துள்ளன.
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் நாம் காணும் ஓர் அரசாங்கம் போல் வேறு ஒர் கறுப்பு அரசாங்கத்தை நடத்திச் சென்றுள்ளனர்.
அவர்களுக்கு சட்டரீதியான இராணுவத்தால் ஆயுதம் வழங்கப்பட்டுள்ளது.போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டிய பொலிஸார் அதை விநியோகித்துள்ளனர்.
இவற்றை ஒழிக்க சட்டம் இயற்றும் அரசியல்வாதிகள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிலிருந்து போதைப்பொருள் வலையமைப்பை
மேலும் போலி கடவுச்சீட்டுக்கள் அதை தடுக்கும் அமைப்பால் செய்து கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு பல செயற்பாடுகளால் அவர்கள் சட்டத்திலிருந்து பாதுகாப்பட்டுள்ளனர். இதனால் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் பாதாள அரசாங்கத்தை நடத்தியுள்ளனர்.
அதில் சூட்டுச் சம்பவங்கள், அச்சுறுத்தல்கள், வர்த்தகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற பொரும்பாலான குற்றச் செயலகள் நடைபெறுகின்றன.
மேலும் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் நாட்டின் ஐம்பது வீதம் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கியுள்ளனர்.
ஆயுதம் தாங்கிய குழுக்களுடன் 75 வீதம் தொடர்பில் இருந்துள்ளனர். ஆதலால் நாம் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலை முழுமையாக ஒழித்துக் கட்டுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



