தமிழர்களை குறி வைத்து ஜனாதிபதி கூறிய ஒற்றை சொல்லால் எழுந்துள்ள பெரும் சர்ச்சை!
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார, 'கள்ளத்தோணி' என்ற வார்த்தையை பயன்படுத்தியது சிறுபான்மை மக்களை இழிவுப்படுத்தும் செயற்பாடாகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் ஜனாதிபதி அனைத்து மக்களின் பாதுகாவலர் என அழைக்கப்படுபவர்.ஆனால் அதியுயர் பதவியில் இருந்து கொண்டு பேசும் போது அவர் தனது வார்த்தை பிரயோகங்களில் மிக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
எசல பெரஹரா
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்ற வருடாந்த எசல பெரஹராவின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,''நாங்கள் சர்வதேசத்தில் நாட்டின் எதிர்காலத்தை நிலை நிறுத்துவதிலும் தேசிய உரிமைகளை பாதுகாப்பதிலும் தேல்வியடைந்துள்ளோம்.
ஒரு பௌத்த மதகுரு சொன்ன வார்த்தை, அது தவறானதாகவும் இருக்கலாம், 'கள்ளத்தோணி' போன்று எதிர்காலமும் வரலாறும் இல்லாதவராக எமது நாட்டினர் வளர்ந்துள்ளனர்.
சிறுபான்மை இனம்
இதேவேளை, சிலர் கூறுகிறார்கள்,நாம் வரலாற்றை ஆழிக்க திட்டம் தீட்டுவதாக ஆனால் எமது நாட்டின் வரலாற்றை அழிக்க முடியாது.''என கூறியுள்ளார்.
இலங்கையில் ‘கள்ளத்தோணி’ என்ற சொல் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக பேரினவாதத்தினர் பிரபலமாக பயன்படுத்தும் ஓர் சொல்லாகும்.
பொதுவாக இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு எதிராகவே இந்த சொல் அதிகமாக பயன்படுத்தப்படும். மேலும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் ‘மரக்கலயா’ என்ற ஒரு சொல் பயன்படுத்தப்படும். இவ்வாறு அழைக்கப்படுவதன் நேரடி அர்த்தம் ‘மரக் களங்களில் வந்த அந்நியரே’ என்பதாகும்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
