ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கே வெற்றி : அனுர குமார நம்பிக்கை - செய்திகளின் தொகுப்பு
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பது வீத வாக்குகளை தமது கட்சியால் நிச்சயமாகப் பெற முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
மேலும், எத்தனை ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைக்கப்பட்டாலும், வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களை மட்டுமே மையப்படுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு இடையே தேசிய மக்கள் சக்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதோடு, அதிக வாக்குகளைப் பெற்று தமது கட்சி நிச்சயமாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |