தமிழர் பகுதியில் அநுர அரசின் இரகசிய டீல் படுதோல்வி
வடக்கு-கிழக்கை உடைத்து தங்களுக்கு கீழ் நிரந்தரமாக வைத்துக்கொள்வதன் மூலம் அடுத்தகட்டமாக மாகாணசபையும் கைப்பற்றி விடலாம் என்பது தான் தேசிய மக்கள் சக்தியினரின் நோக்கமாக இருந்ததாக கனடா அரசியல் ஆய்வாளர் குயின்ரஸ் குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியனர் எதிர்ப்பார்த்தளவு வெற்றியை பெறாவிட்டாலும் கணிசமானளவு வெற்றியை பெற்றுள்ளார்கள்.
எனினும், ஒட்டுமொத்தமாக வடக்கு-கிழக்கை தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்து விட்டோம் என்று ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரும், நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரும் உரிமைக்கோரிய விடயத்தில் பலத்த அடி விழுந்துள்ளது.
அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு வடக்கு-கிழக்கை ஒட்டுமொத்தமா கதங்கள் வசம் வைத்திருக்கலாம் என்பதில் தான் கரிசனையாக இருந்தார்கள். இதற்காக பாரிய கூட்டத்தையொல்லாம் நடத்தியிருந்தார்கள்” என சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு....
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam