ரணில் - மைத்திரி அரசாங்கங்களை விட வலுவான ஒப்பந்தம்! அருண் ஹேமச்சந்திரா விளக்கம்
இலங்கையில் ஆட்சியமைத்த கடந்த இரண்டு அரசாங்கங்களையும் விட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியாவுடனான இராஜதந்திர உறவை வலுப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா(Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட மித்ர விபூஷண விருது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது.
இராஜதந்திர தொடர்பு
நாங்கள் அதை வரலாற்று மற்றும் இராஜதந்திர தொடர்புகளுக்கு இடையே மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கிறோம்.
புதிய அரசாங்கம் உண்மையில் இந்தியாவுடன் ஏனைய அரசாங்கங்களை விட மிக நெருக்கமாக பணியாற்ற உறுதிபூண்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் சமீபத்திய இந்திய விஜயத்தின் போது இலங்கைக்கு அன்பான வரவேற்பு கிடைத்தது.இது இந்தியாவின் வளர்ந்து வரும் ஆதரவை வலியுறுத்துகிறது.
இலங்கை பெறும் உதவி
இந்தியாவிலிருந்து இலங்கை பெறும் உதவி அதிவேகமானது மட்டுமல்ல, மிகவும் மதிப்புமிக்கது.
இந்த ஒத்துழைப்பு எதிர்காலத்தில் தொடர்ந்து வலுவடையும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும், இலங்கையில் ஏதேனும் ஒரு பிரச்சினை இருக்கும்போது, இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை இந்த நாட்டின் குடிமக்களுக்கு எப்போதும் உதவியாக இருந்து வருகிறது.
இலங்கை மக்கள் சார்பாக, அந்தக் கொள்கையைப் பேணுவதற்கு இந்தியாவுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்" என்றார்.





சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
