பெரிய கள்ளனை பிடிக்க திணறும் அநுர! பொய்யாகிப் போன வாக்குகள்
நாட்டில் இருக்கும் கள்ளன்களை அநுர குமார திஸாநாயக்க ஒருபோதும் பிடிக்க மாட்டார். பெரிய கள்ளனை பிடிக்கவும் முடியாது என்று சிவில் சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் யூனுஸ் தெரிவித்தார்.
க்ளீன் ஸ்ரீ லங்கா என்ற திட்டத்தின் ஊடாக மக்களது வங்கிக் கணக்கில் மிஞ்சியிருக்கும் பணத்தினைத் தான் இந்த அநுர அரசாங்கம் க்ளீன் செய்து கொண்டிருக்கின்றது என்றும் அவர் விசனம் வெளியிட்டார்.
அநுரவின் அடுத்த நடவடிக்கைக்கு காத்திருக்கும் நாடு
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், ஜேவிபியினரால் திருடப்பட்ட தேசிய அடையாள அட்டைகளை திரும்ப கொடுத்தார்களா? வங்கிகளை கொள்ளையடித்து களவாடிச் சென்ற தங்கத்தை ஜேவியினர் திரும்ப கொடுத்தனரா என்று அநுர அரசாங்கத்தின் மீது சரமாரியான கேள்விகளை அவர் தொடுத்தார்.
அத்துடன், உகண்டாவில் இருந்து கொண்டு வருவதாக கூறிய ராஜபக்சர்கள் பதுக்கி வைத்ததாகக் கூறப்படும் கோடிக்கணக்கான டொலர்களை அநுர தரப்பு மீளக் கொண்டு வந்துவிட்டனரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு விட்டு பின்னர் மைத்திரியின் தேர்தல் பிரசார மேடையில் ஏறி, நிச்சயமாக மகிந்த வெற்றிபெறுவார் என்று வாய்தவறி அநுர குமார தானே கூறினார். அநுரவின் மனதில் மகிந்த உள்ளாரோ என்பது தெரியாது.
அத்துடன், நாட்டில் இருக்கும் கள்ளன்களை அநுர குமார திஸாநாயக்க ஒருபோதும் பிடிக்க மாட்டார். பெரிய கள்ளனை பிடிக்கவும் முடியாது என்றும் ஷிராஸ் யூனுஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சரியாக பேசுகிறாரோ இல்லையோ ஆனால் தைரியமாக முன்வந்து பேசுகின்றார். கேள்வி கேட்கின்றார். அவரது கேள்விக்கு முதலில் பதில் வழங்க முடியாமல் ஆட்சியாளர்கள் திணறுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.