ராஜபக்ச குடும்பத்திற்கு அச்சப்படுகின்றாரா அநுர... கைதுகள் தாமதமாவது ஏன்..!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தேர்தலுக்கு முன்னர் 'மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட அனைவருக்கு எதிராகவும் ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுப்போம்' என தெரிவித்திருந்தார்.
அத்துடன், குறித்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எம்மிடம் ஆதாரங்கள் அடங்கிய கோப்புக்கள் உள்ளன. எனவே, ஆட்சி கைக்கு வந்தால் உடன் கைது செய்வோம் எனவும் தேசிய மக்கள் சக்தி தரப்பினர் மக்களுக்கு வாக்குறுதியளித்தனர்.
இருப்பினும், தற்போது ஆட்சிக்கு வந்து இத்தனை மாதங்கள் ஆன பின்னும் அவர்கள் குறித்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அது மாத்திரமன்றி, அந்த ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் நீதித்துறையே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்போது அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
நீதித்துறையின் பொறுப்பு...
அவ்வாறாயின், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதிரடியாக ஒவ்வொருத்தரையும் கைது செய்வோம் என ஏன் தெரிவிக்க வேண்டும், நாங்கள் நீதித்துறையிடம் அவர்களை முன்னிறுத்துவோம் என வாக்களித்திருக்கலாமே என்றவாறும் விமர்சிக்கப்படுகின்றது.
உண்மையில், முந்தைய அரசாங்கங்களை போலவே தான் தேசிய மக்கள் சக்தியும், ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்காக செயற்பட மாட்டார்கள் என்ற ஒரு
ஏமாற்ற நிலை மத்தியில் நிலவுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், அநுர அரசாங்கமும், இலங்கையின் பெரிய அரசியல்வாதி குடும்பங்களுக்கு அச்சப்பட்டவர்களாக இருக்கின்றார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது என பேராசிரியர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், மக்களின் மத்தியில் இருக்கும் இவ்வாறானதொரு மனநிலைக்கு மத்தியில் அநுர அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
