யாழில் தமிழரசு கட்சியினருடன் அநுர அவசர சந்திப்பு
யாழ்ப்பாணத்துக்கு (Jaffna) விஜயம் செய்துள்ள அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குழுவினர், மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தலைமையிலான தமிழரசுக் கட்சியினரை (ITAK) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பானது, மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (11.06.2024) காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பிரதானமாக ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அரசியலில் பரபரப்பு
இந்த சந்திப்பிற்கு தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா, சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ். குலநாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி ஆகியோர் சமூகமளித்துள்ளனர்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தி சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அந்தக்
கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்கா, இராமலிங்கம்
சந்திரசேகர் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள்
சக்தி குழுவினர் நேற்று தமிழரசுக் கட்சியினரை சந்தித்துக்
கலந்துரையாடியிருந்த நிலையில், இன்று தேசிய மக்கள் சக்தியினரும் தமிழரசுக்
கட்சியினரை சந்தித்துள்ளமை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |