இனப் பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத அநுர அரசு!அணையா தீபம் முற்றத்தில் குரு முதல்வர் குமுறல்
நாட்டில் இருக்கும் இனங்களுக்கிடையிலான பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத இன்றைய அரசு தீர்வை தரும் என நம்புவது சாத்தியமற்ற ஒன்று என இலங்கை திருச்சபையின் யாழ்.குரு முதல்வர் செல்வன் தெரிவித்துள்ளார்.
செம்மணிப் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று (28) மெதடிஸ்த திருச்சபையினரால் செம்மணி அணையா தீபம் முற்றத்தில் அடையாளப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாார்.
அவர் மேலும் கூறுகையில், செம்மணி என்பது இனப்படுகொலை நடத்தப்பட்டதன் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு சாட்சியுமாகும்.
இனப்படுகொலை
இந்த சாட்சியமே இன்று இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதையும் அதற்கான நீதி வேண்டும் என்பதையும் சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லுகின்றது.
எனவே அதற்கான வலுப்படுத்தலை நாம் ஒவ்வொருவரும் முன்னெடுப்பது அவசியமாகும். அதற்காகவே மெதடிஸ்த திருச்சபை இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
நீதி
இதேநேரம் கொல்லப்பட்டவர்களின் குருதிகள் தமக்கான நீதியை பெற்றுத்தாருங்கள் என எங்கள் ஒவ்விருவரிடமும் ஓலமிட்டவண்ணம் இருக்கின்றன.

அந்த ஓலங்களுக்கு நாம் நீதியை இலங்கையில் இந்த அரசிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது.எனவே சர்வதேசத்திடம் இதற்கான நீதியை கோரி நிற்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
குறித்த போராட்டத்தில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக் குரு கந்தையா ஜெகதாஸ், அருள்பணி அருளானந்தம் சமுவேல் சுபேந்திரன், வேலன்சுவாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri