மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அநுர
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்னும் நிறைவேற்றவில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் நேற்று (01.05.2025) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன இணைந்து நடத்திய மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலைகள்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸினருடன் இணைந்து அறிவித்தார்.
ஆனால் இதுவரையில் ஆயிரத்து 700 ரூபா கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆயிரத்து 700 ரூபா பற்றி பேசப்படும் என தற்போதைய ஜனாதிபதி கூறுகின்றார். அது எப்போது கைகூடும் என்பது தெரியவில்லை.
இன்று பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன. இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஏமாற்றுவித்தையாக எரிபொருள் விலை குறைப்பு
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நுவரெலியா மாவட்ட மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு பேராதரவு வழங்கினார்கள். நாம் என்றும் மக்களுடன்தான் இருப்போம்.
மலையக மக்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகம் பேசினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. உகண்டாவில் உள்ள ராஜபக்சக்களின் பணம் கொண்டுவரப்படும் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை.
தேர்தல் நெருங்கும்வேளை ஏமாற்றுவித்தையாக எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan
