நிலக்கரி பிரச்சினையை விசாரிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு
நிலக்கரி பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (10.4.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்கமைய, நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து இந்த விசேட விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விசாரணை
மேலும், இதற்காக தற்போது சேவையில் உள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நிலக்கரி ஊழலுக்கு எதிராக சஜித் அணியினர் இன்று(10.4.2026) பத்தரமுல்ல தியத உயனவிற்கு அருகில் நாடாளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் சந்தியில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.