பிமலை கைதுசெய்து ரணிலின் சாதனையை முறியடியுங்கள்! அநுரவுக்கு முன்னாள் எம்.பி சவால்
சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து, ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை முறியடியுங்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சவால் விடுத்துள்ளார்.
துறைமுக கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கும், மனித படுகொலைகளுக்கும் நேரடி தொடர்புண்டு என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பிமல் ரத்நாயக்க
பரிசோதனைகள் ஏதுமின்றி 2025.01.18 ஆம் திகதி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகவும், அந்த கொள்கலன்களில் இருந்த பொருட்கள் என்னவென்பதை உரிய தரப்பினர் வெளிப்படுத்தவில்லை என்றும் சுங்க திணைக்கள சேவை சங்கம் குறிப்பிட்டது.
இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு தான் உத்தரவு பிறப்பித்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். பிமல் ரத்நாயக்க கப்பற்றுறை அமைச்சராக இருக்கலாம், ஆனால் சுங்கத்திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது.
கொள்கலன் நெரிசலுக்கு தீர்வு தொடர்பான பரிந்துரைகளை மாத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்க இந்த உபகுழுவுக்கு பணிக்கப்பட்டிருந்தது.
பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் என்னவிருந்தது என்பதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக சுங்கத்திணைக்களத்திடம் 2025.02.28 ஆம் திகதியன்று கோரியிருந்தேன். இந்த கேள்விகளுக்கு சுங்கத் திணைக்களத்தின் பதில்கள் பூரணமாக இருக்கவில்லை.
ஊடக அறிக்கை
கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் 2025.01.29 ஆம் திகதியன்று வெளியிட்ட ஊடக அறிக்கையை சுங்கத் திணைக்களம் இணைத்துள்ளது.
இந்த கொள்கலன்களில் என்னவிருந்தது என்பதை வெளிப்படுத்த அரசாங்கம் ஏன் இன்றும் பின்வாங்குகிறது.
இந்த கொள்கலன்களில் ஆயுதம் மற்றும் ஆயுத இணைப்பு கருவிகள் இருக்கலாம் என்ற பாரியதொரு சந்தேகம் எமக்கு காணப்படுகிறது.
கடந்த நான்கு மாத காலப்பகுதியில் சமூக கட்டமைப்பில் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கும், மனித படுகொலைகளுக்கும் நேரடி தொடர்புண்டு என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது.” என்றார்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri
