ரணிலின் புண்ணியத்தால் தான் ஜனாதிபதியானார் அநுர!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புண்ணியத்தால்தான் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
இலஞ்ச, ஊழல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரணில் விக்ரமசிங்க வரவழைக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
பிரசார மேடை
மேலும், "ரணில் இல்லையேல் அநுர ஜனாதிபதி பதவிக்கு வந்திருக்க மாட்டார். எனவே, ரணில் மீது தேசிய மக்கள் சக்தி அரச கை வைக்கும் என நான் நம்பவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புண்ணியத்தால் தான் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானார். ரணில் இல்லையேல் அநுர இந்தப் பதவிக்கு வந்திருக்க மாட்டார்.
எனவே, பிரசார மேடைகளில் கூறப்படுவது போல் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் நம்பவில்லை. என்ன நடக்கின்றது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 14 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
