ஆயுதமின்றி உலகக்கிண்ண போட்டியை பார்த்த தமிழ் போராளிகள் - அநுர கூறும் தகவல்
1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஆயுதங்களை வைத்துவிட்டு போராளிகளும் பார்த்ததாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் இன்று(01) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த 1996 காலப்பகுதியில் கிரிக்கெட் உலகக் கோப்பையும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது போராளிகளும் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு உலகக் கோப்பை போட்டியை பார்த்தார்கள் என நான் கேள்விப்பட்டேன்.
கிரிக்கெட்டால் அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்த முடியும் என்பதையே இது உணர்த்துகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



