ஜனாதிபதி மாளிகையில் புராதன பொருட்கள் திருட்டு:மூவர் கைது-செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பல பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்களை வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தபோது, சந்தேக நபர்கள் ஜன்னல் திரைச்சீலைகளைத் தொங்கவிட சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த 40 தங்க நிற பித்தளைப் பந்துகளைத் திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பழைய பொருட்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,