சர்ச்சைக்குரிய நுண்ணுயிர் எதிர்ப்பி: மீண்டும் ஏற்படுத்திய பாதிப்பு
கடந்த ஜூலை மாதம் 21 வயதுடைய பெண் ஒருவரின் மரணத்திற்கு காரணமான “Ceftriaxone” என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேலுமொரு நோயாளிக்கு ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவல்களின்படி, சோர்வு காரணமாக டிசம்பர் 09 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு செஃப்ட்ரியாக்ஸோன்(Ceftriaxone) மருந்து வழங்கப்பட்டது.
இதன்பின்னர், குறித்த நோயாளி பல ஒவ்வாமை சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளார்.
நுண்ணுயிர் எதிர்ப்பி
தடுப்பூசி செலுத்திய உடனேயே, குறித்த நோயாளி தனது கையில் உணர்வின்மையை அனுபவித்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து கடுமையான சிக்கல்கள் காரணமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் தீவிர சிகிச்சை பிரிவில் நடத்தப்பட்ட சோதனைகளின்படி, இரத்த அழுத்தம் மற்றும் நுரையீரலில் ஒக்ஸிஜனின் சதவீதம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் செஃப்ட்ரியாக்ஸோன்(Ceftriaxone) நுண்ணுயிர் எதிர்ப்பியை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதற்குப் பதிலாக மாற்று நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துமாறும் வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்களுக்கு நேற்று(11) காலை அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தகவல் தொடர்பில் சுகாதார அமைச்சு இன்னும் தகவல் எதனையும் வெளியிடவில்லை என கூறப்படுகின்றது.
செஃப்ட்ரியாக்ஸோன்(Ceftriaxone) என்ற எதிர்ப்பியின் விளைவாக ஏற்கனவே இரண்டு மரணங்கள் மற்றும் கடுமையான தாக்கங்கள் பேராதனை போதனா வைத்தியசாலை மற்றும் கேகாலை போதனா வைத்தியசாலை என்பவற்றில் பதிவாகியுள்ளன.
செஃப்ட்ரியாக்ஸோன்(Ceftriaxone) ஒரு எண்டிபயாடிக் என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி ஆகும். இது பல வகையான பக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |