வாழைச்சேனையில் அன்டிஜன் பரிசோதனையில் மூன்று பேருக்கு கோவிட் தொற்று
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மூன்று பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் இன்று தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்றாளர்களுடன்
நெருங்கிய உறவினர்கள் பத்து பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில்
மூவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்த பதினைந்து பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
குறித்த பி.சி.ஆர். பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்று அதிகரித்துக்
காணப்படும் நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி தொடர்ச்சியாக பி.சி.ஆர்.
பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் என்பன இடம்பெற்று வருகின்றன.



