கோறளைப்பற்று மத்தியில் 54 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை - மூவருக்கு தொற்று உறுதி
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐம்பத்து நான்கு (54) நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மூன்று பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்துள்ளார்.
இப்பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் கோவிட் தொற்றாளர்களுடன் நெருங்கிய உறவினர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு ஐம்பத்து நான்கு (54) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அதனுடன் பத்து (10) நபர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளும் இடம்பெற்றுள்ளன.
குறித்த அன்டிஜன் பரிசோதனை நிகழ்வில்; மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் வைரஸ்
தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர்.
பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




