மட்டக்களப்பு மாவட்டத்தில் 315 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை! 8 பேருக்கு தொற்று உறுதி!
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 315 பேருக்கு இன்று சனிக்கிழமை (02) மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் காத்தான்குடியைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியில் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 7 பேருக்கும், களுவாஞ்சிகுடியில் மேற்கொண்ட பரிசோதனையில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் உட்பட 8 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 10 நாட்களில் காத்தான்குடி சுகாதார வைத்திய பிரிவில் 76 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவு தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 226 ஆக அதிகரித்துள்ளது
இதனைத் தொடர்ந்து தீவிரமான சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை வரை வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பிரதேச செயலக பிரிவு தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.