நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு என்டிஜன் பரிசோதனை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு என்டிஜன் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக நாடாளுமன்றின் பிரதம படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதி காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையில் இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ள இடங்களிலிருந்து வரும் பணியாளர்களை பரிசோதனைக்கு உட்படுத்துவது மிகவும் பொருத்தமானது என சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களின் நலன்களை உறுதி செய்யும் நோக்கில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருக்கும் பணியாளர்கள் பலருக்கும் கோவிட் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
