அவுஸ்திரேலியா செல்லும் இலங்கையர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள ஆன்டிஜன் பரிசோதனை
அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் இலங்கையர்கள் விமானத்தில் ஏறும் முன்னர் விரைவான ஆன்டிஜன் பரிசோதனை நடத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் வெளியிட்டுள்ள சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் அவுஸ்திரேலியா செல்லும் பயணிகளுக்கு மே மாதம் 15 ஆம் திகதி முதல் ஆன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் அடங்கிய மருத்துவ அறிக்கையும் அவுஸ்திரேலியா செல்லும் பயணிகளுக்கு இருக்க வேண்டும்.
புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளின் சான்றுகள் விமான நிறுவனம் சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
