இலங்கையரின் தீவிரவாத தாக்குதலால் நியூசிலாந்தில் கடுமையாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள்
நியூசிலாந்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் கடுமையாக்கப்படும் என அந்த நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டென் தெரிவித்துள்ளார்.
இலங்கையர் ஒருவர் நியூசிலாந்தின் ஒக்லாண்டில் உள்ள சிறப்பங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் 6 பேர் காயமடைந்திருந்தனர். இதனையடுத்து ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதரவாளரான குறித்த சந்தேகநபர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டார்.
தாக்குதலுக்கு இலக்கானவர்களில் மூவரின் நிலை கவலைகிடமாகவுள்ளது. இந்தநிலையில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நியூஸிலாந்து பிரதமர்,
வரலாற்றை மாற்ற முடியாதெனவும் எதிர்காலத்தில் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதை தவிர்க்க முடியும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்ற ஆதரவுடன் நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த தாக்குதலை நடத்திய இலங்கையர், காத்தான்குடியை சேர்ந்தவர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை புலனாய்வு துறையினரால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் காத்தான்குடி பகுதியை சேர்ந்த முஹமது சம்சுதீன் ஆதில் என்ற 31 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்....
நியூசிலாந்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட காத்தான்குடி நபர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்
நியூசிலாந்தில் தாக்குதலை மேற்கொண்டவரின் தாயாரிடம் காத்தான்குடியில் தீவிர விசாரணை





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
