மக்களை பாதுகாக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அறிமுகம் - விஜயதாச ராஜபக்ச
நாட்டின் மக்களை பாதுகாக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ பாதுகாக்கும் நோக்கில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உருவாக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அநேகமானவர்கள் பயங்கரவாதிகளின் உரிமைகளுக்காக பேசுகின்றார்கள்.எனினும் பயங்கரவாதத்தை எதிர்த்து தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென நம்பும் 90 வீதமான பொதுமக்கள் சார்பில் அவர்கள் குரல் கொடுப்பதில்லை.
அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்ள நாம் சட்டம் இயற்றவில்லை. இந்த நாட்டு மக்களின் உயிர்களை பாதுகாக்வே நாம் சட்டம் இயற்றுகின்றோம் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.