பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இப்போது சமர்ப்பிக்கப்பட மாட்டாது : அரசு பகிரங்க அறிவிப்பு
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அவசரமாகச் சமர்ப்பிக்கப் போவதில்லை என்று அரசு அறிவித்துள்ளது.
இதனை இன்று (28.04.2023) நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்வேறு தரப்பின் எதிர்ப்புக் காரணம்
2015 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமே தற்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்தது.
எனினும், பல்வேறு தரப்பினரும் காட்டிய எதிர்ப்புக் காரணமாக இந்தச் சட்டமூலத்தை அப்படியே அவசரப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து எவரும் தமது ஆலோசனைகளை வழங்கலாம்.
இந்தநிலையில் அனைவரின் கருத்துக்களும் உடன்பாடுகளும் பெற்றுக்கொள்ளப்பட்ட
பின்னரே இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
