புதிய சட்டம் மக்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலெனில் ஆதரிக்கமாட்டோம்: மொட்டுக் கட்சி தெரிவிப்பு
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் எனின் அதனை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரிக்காது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மக்களின் பாதுகாப்பு, ஊடக பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்று அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே எமது கட்சி இருக்கின்றது. அதற்கேற்ற வகையிலேயே புதிய சட்டம் அமைய என நம்புகின்றேன்.

போலிப் பிரசாரங்கள்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் எனக்குத் தெரியாது. அது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.
ஜே.வி.பி. உட்பட பயங்கரவாதச் செயலில் ஈடுபட எத்தனிக்கும் நபர்களுக்கு இத்தகைய சட்டம் வலிக்கும். அத்தகையவர்களே போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
ரோஹினி செய்த காரியம், விஜயாவிற்கு பளார் விட சென்ற அண்ணாமலை... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam