தேசப்பற்றாளர்களின் சீன பற்று:வீரவங்சவின் தமிழர் விரோத இனவாத சந்தைப்படுத்தல்

Mahinda Rajapaksa Wimal Weerawansa Janatha Vimukthi Peramuna China
By Steephen Sep 30, 2022 07:11 AM GMT
Report

விமல் வீரவங்ச என்பவர் அனகாரிக தர்மபாலவிற்குப் பின்னர் இலங்கையை மீண்டும் பழங்குடியின பழமைவாத தீவாக மாற்றுவதற்குத் தேவையான சித்தாந்தத்தை நிறுவுவதற்கும் அதனை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நபர்.

தமிழர் எதிர்ப்பை சந்தைப்படுத்திய வீரவங்ச

தேசப்பற்றாளர்களின் சீன பற்று:வீரவங்சவின் தமிழர் விரோத இனவாத சந்தைப்படுத்தல் | Anti Tamil Racist Marketing Of Patriots

மக்கள் விடுதலை முன்னணி வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட தேர்தலில் அந்த கட்சி 38 ஆசனங்களை கைப்பற்றி மிக பெரிய வாக்காளர் தளத்தை வென்றெடுத்தது. அந்த தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணிக்கு பாரியளவிலான வாக்குகள் கிடைப்பதற்கு வேறு காரணங்கள் எதுவுமில்லை.

வீரவங்சவின் தமிழர் விரோத இனவாத சந்தைப்படுத்தல் விளையாட்டே இதற்கு காரணம். அடுத்து அந்த இனவாத சந்தைப்படுத்தல் விளையாட்டை வீரவங்ச மகிந்தவிடம் கொண்டு சென்றார்.

அப்போது மக்கள் விடுதலை முன்னணியின் வாக்கு வங்கியின் அடித்தளம் முற்றிலும் அழிந்து போனது. மக்கள் விடுதலை முன்னணியும் சும்மா இருந்து விடவில்லை.ராஜபக்ச முகாமுடன் போட்டி போட்டு தமிழர் எதிர்ப்பை சந்தைப்படுத்தியது.

எவ்வாறாயினும், இந்த விளையாட்டு யுத்தம் சுமார் இருநூறு பில்லியன் டொலர்களை அழித்து வடக்கில் லட்சக்கணக்கான தமிழ் உயிர்களை பறித்து முடிவுக்கு வந்தது.

ராஜபக்சவினர் சித்தாந்தம் இல்லாத முட்டாள் கூட்டம்

தேசப்பற்றாளர்களின் சீன பற்று:வீரவங்சவின் தமிழர் விரோத இனவாத சந்தைப்படுத்தல் | Anti Tamil Racist Marketing Of Patriots

ராஜபக்சவினர் அதிகாரத்தையும் செல்வத்தையும் வெறித்தனமாக துரத்துகின்ற சித்தாந்தம் இல்லாத முட்டாள்களின் கூட்டம். வீரவங்ச தலைமையிலான கம்மன்பில, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் பலர் ராஜபக்சவின் வெற்றுக் கருத்தியல் வெற்றிடத்தை பழமைவாத இனவாத பழங்குடித்தனத்தால் நிரப்பினர்.

மகிந்தவின் விஞ்ஞாபனத்தின் பெயர் மகிந்த சிந்தனை என்றாலும் அந்த எண்ணக்கரு தெளிவாக விமல் வீரவங்சவிற்குரியது.

அது மட்டுமல்லாது மகிந்த சிந்தனை என்ற பெயரையும் விமல் வீரவங்சவே பரிந்துரைத்தார். மகிந்த ராஜபக்ச 88, 89ல் மனித உரிமைக்காக ஜெனிவா சென்ற அரசியல் ஒரு பாத்திரம்.

போர் என்பது எனது முறையல்ல என்று மகிந்த ராஜபக்ச ஆரம்பத்தில் கூறினார். ஆனால் அதிகார காரணிக்கு முன்னால் மகிந்தவிடம் இருந்த அனைத்து நியாயமான  விடயங்களும் தோற்றுப்போய் வீரவங்சவின் இனவாதம் ராஜபக்சவின் சித்தாந்த முன்னணியாக மாறியது. வீரவங்சவின் இனவாதத்திற்கு உயிர் கொடுத்து அதனை நாட்டின் தேசியப் பார்வையாக மாற்றியதே இங்கு மகிந்த செய்த மிக பெரிய தவறு.

பெரிய சமூகம் இனவாதமாக இருந்தால் மோசமான அரசியல்வாதி இனவெறியாளராக இருக்க வேண்டும்

தேசப்பற்றாளர்களின் சீன பற்று:வீரவங்சவின் தமிழர் விரோத இனவாத சந்தைப்படுத்தல் | Anti Tamil Racist Marketing Of Patriots

உலகமயமாக்கப்பட்ட உற்பத்தி பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட சகாப்தத்தில், பழமைவாத பழங்குடியினரால் மட்டுமே தேசிய தன்னிறைவு பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். தற்போது மரணிக்காது வாழ்வதற்கு, குறைந்தபட்சம் பழங்குடியினரால் கூட அத்தகைய வரம்பில் இருக்க முடியாது.

விமல் மக்கள் விடுதலை முன்னணியில் இருக்கும் போது கொண்டு வரப்பட்ட "எம்முடைய கொள்வனவு செய்யுங்கள்" மற்றும் "சூரிய சிங்கம் ​​இலச்சினை" போன்ற தனித்துவப் பிரசாரங்கள் உலகளாவிய பொருளாதாரத்தின் உண்மையை மறைத்து ஒரு தவறான தேசியவாத யதார்த்தத்தை மிகைப்படுத்த மேற்கொண்ட முயற்சியாகும்.

பெரிய சமூகம் இனவாத சமூகமாக இருந்தால், மோசமான அரசியல்வாதி ஒருவர் இனவெறி கொண்டவராக இருக்க வேண்டும், ஏனென்றால் அவர் வாழ்வதற்கு அந்த பெரிய சமூகம் எந்த கொள்கை நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பது முக்கியம். அதுதான் விமல் வீரவங்சவின் மோசமான இனவாத அரசியலின் ஆரம்பம்.

இனப்படுகொலைப் போருக்கான உட்கட்டமைப்புகளை வழங்கிய "தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்" மற்றும் "அல்லி மலர் இயக்கம்" போன்ற மோசமான அமைப்புகள் இந்த யதார்த்தத்திலேயே விமல் வீரங்சவின் வட்டத்தில் உருவாகின.

வீரவங்சவின் இந்த வரலாறு எந்த வகையிலும் வரலாற்றில் ஏற்பட்ட விபத்து அல்ல. அவர் நாற்றமடிக்கும் சமூக உடலின் ஒரு அங்கம். அந்த உடலின் உள்ளே இருக்கும் கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்ட அரசியல் உருவம். அந்த இடத்திலேயே பயங்கரம் இருக்கின்றது.

வளர்ச்சியடைந்த நாகரீக சித்தாந்தங்கள் இலங்கை மண்ணில் வளராவிட்டாலும் வீரவங்ச ரகத்திலான பழமைவாத இனவாதம் இந்த மண்ணில் எளிதாகவும் விரைவாகவும் வளரும்.

உலகமயமாதலுக்கு எதிராக சர்வதேச நாணய நிதியத்தை பலிகடாவாக காட்டி இந்த பழங்குடி தேசபற்றாளர்கள் இலங்கையை அடுத்த எந்த பொறிக்குள் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர் என்பது பற்றி நாம் இங்கு கவலைப்பட வேண்டியுள்ளது.

மேற்குலக கடன் மூலாதாரங்கள் உறுப்பு நாடுகளுக்கு வழங்கும் கடன் வசதிகள், கடன்களை திருப்பிச் செலுத்துவதையும், கடன்களை திறம்பட பயன்படுத்துவதையும் உறுதிசெய்யும் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு உட்பட்டது.

சீனாவின் பாசிச பொருளாதர வழிமுறை

தேசப்பற்றாளர்களின் சீன பற்று:வீரவங்சவின் தமிழர் விரோத இனவாத சந்தைப்படுத்தல் | Anti Tamil Racist Marketing Of Patriots

ஆனால் பாசிச பொருளாதார வழிமுறைகளை பின்பற்றும் சீனா போன்ற நாடுகளில் கடன் மூலாதாரங்களின் செயற்பாடுகள் வேறு விதமானவை. சீனா போன்ற நாடுகள் கடனை வழங்கும் போது வழங்கப்படும் கடன் திறம்பட பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய்ந்து பார்ப்பதில்லை. (உதாரணமாக-தாமரை கோபுரக் கடன், ஹம்பாந்தோட்டை சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கான கடன்)

இந்தப் பின்னணியில், சீனக் கடன் கொடுக்கல் வாங்கலிலேயே இலங்கையில் சாதனை படைக்கும் நிதி மோசடி மற்றும் ஊழல்கள் நடந்துள்ளன. கடனாளியை திருப்பிச் செலுத்த முடியாத கடன் வலையில் சிக்க வைப்பதே சீனாவின் தந்திரமான நீண்ட கால வழிமுறையாக இருந்து வருகிறது.

உலகின் பெரும்பாலான கடன் மூலாதாரங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனை சலுகைக் காலத்திற்குள் மறுசீரமைக்க விருப்பம் தெரிவிக்கலாம் என்ற போதிலும் சீனா அவ்வாறு செய்ய விருப்பம் தெரிவிக்கவில்லை.

மாறாக இலங்கை தம்மிடம் பெற்றுக்கொண்ட கடனை அடைக்க வணிக வட்டியில் இலங்கைக்கு கடனை வழங்கி இலங்கை மீது மேலும் கடன் சுமையை திணிக்க சீனா முயற்சித்து வருகிறது.

கடனை ஈடுகட்ட துறைமுகம், விமான நிலையம் தவிர வேறு எதுவும் இல்லாத இலங்கை போன்ற பலவீனமான அரசின் சில இடங்களை தமது பிராந்திய அதிகார அரசியலின் மையமாக ஆக்கிரமிக்கும் அபாயத்தையும் நாம் எதிர்நோக்கி வருகின்றோம்.

இனவாதத்தை சந்தைப்படுத்தி,அதிகாரத்தை கைப்பற்றி யுவான் தரகு மூலம் தமது பைகளை நிரப்ப முயற்சிக்கும் பொய்யான தேசப்பற்றாளர்கள் என்ற மிகப் பெரிய திருடர்கள் மற்றும் சீனாவின் நயவஞ்சக அதிகார அரசியலின் நலன்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகலாம்.

இதனடிப்படையில், கொள்ளையடிக்கும் சீனாவின் அடுத்த இலங்கையின் தரகர் பாத்திரத்தை ஏற்று நடிப்பது வீரவங்ச குழுவின் எதிர்கால நடவடிக்கைகளாக மாறும் பெரும் வாய்ப்புகள் உள்ளன.

லங்கா நியூஸ் வெப்

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US