பாகிஸ்தானில் தொடரும் பதற்றம்! இம்ரான் கான் கைது வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை ஒரு மணி நேரத்திற்குள் மன்றில் முன்னிலைப்படுத்துமாறு, அந்த நாட்டின் ஊழல் தடுப்புக் குழுவுக்கு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றப் பதிவாளரின் அனுமதியின்றி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து அவரைக் கைது செய்ததன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றதாக கருதப்பட்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்ட இம்ரான்கான்
இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் மனுவை இன்று (11.05.2023) விசாரித்த பாகிஸ்தான் தலைமை நீதியரசர் உமர் அதா பண்டியல் உள்ளடங்கிய நீதியரசர்கள் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
70 வயதான இம்ரான் கான் லாகூரில் இருந்து வழக்கு ஒன்றிற்காக வந்தவேளையில் இஸ்லாமாபாத் மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து நேற்று முன்தினம் (09.05.2023) கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, இரவு முழுவதும் இரகசிய இடத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் என்ஏபி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர், காவல் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூடிய அறைக்குள் இம்ரான் கான் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஊழல் வழக்கு
ஊழல் வழக்கு தொடர்பாக அவரிடம் மேலும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைக்க என்ஏபி அனுமதி கோரியது. அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், இம்ரான் கானை 8 நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க நேற்று அனுமதி வழங்கியது.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாகிஸ்தான் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளுக்கு பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) அலுவலகங்களில் என்ஏபி அதிகாரிகள், பொலிஸார் சோதனையில் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்ரான் கான் கைது தொடர்பாக டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் போன்றசமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதை தடுக்க மொபைல் இணைய சேவைகளை இரத்து செய்ய பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கான இறுதி தேர்வு இரத்து செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பாடசாலைகளை மூடவும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க கூடுதல் இராணுவப் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOw |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 21 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
