பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு வெளியே துணை இராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இம்ரான் கான் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில் இன்று (09.05.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்ரான் கான் கைது
இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இன்று காலை (09.05.2023) நீதிமன்றத்துக்கு புறப்படுவதற்கு முன்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் இம்ரான் கான் வெளியிட்டிருந்த காணொளியில், தன்னை கைது செய்ய இரண்டு முக்கிய காரணங்கள் என்று கூறியிருந்தார்.
Rangers abducted PTI Chairman Imran Khan, these are the visuals. Pakistan’s brave people must come out and defend their country. pic.twitter.com/hJwG42hsE4
— PTI (@PTIofficial) May 9, 2023
“அதில் முதலாவதாக, தேர்தல் அறிவிக்கப்படும்போது இன்ஷா அல்லாஹ் நான் பேரணிகளை நடத்துவேன் என்பதால் என்னை பிரசாரம் செய்வதிலிருந்து தடுக்க அவர்கள் கைது செய்ய முயல்கிறார்கள்.
இரண்டாவதாக, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் பட்சத்தில், ஆதரவாளர்களுடன் சேர்ந்து அரசியலமைப்பை பாதுகாக்கும் வகையில் நான் மிகப்பெரிய இயக்கத்தை நடத்துவேன் என்பதாலும் இப்படி செய்ய முற்படுகின்றனர்.
கொலை முயற்சி
என்னை ஏற்கெனவே இரண்டு முறை அந்த ஐஎஸ்ஐ உயரதிகாரி கொலை செய்ய முயன்றுள்ளார்“ என்று இம்ரான் கான் குற்றம்சாட்டினார்.
“நீதிமன்ற வளாகத்தில் மிகப்பெரிய அளவில் அதிரடிப்படையினர், ரேஞ்சர்கள் இருப்பதாக அறிகிறேன். எனக்கு எதிராக எந்தவொரு நீதிமன்ற வழக்கு நிலுவையில் இல்லை என்றாலும் என்னை கைது செய்ய விரும்பினால், எனக்கு எதிரான கைது வாரன்ட்டை அவர்கள் காண்பிக்கட்டும். நான் மகிழ்வுடன் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன்“ என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு
இஸ்லாமாபாத் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மேலும், இம்ரான் கைதுக்கு எதிராக அவரது கட்சியினர் அந்நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இம்ரான் கான் கைதுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிடப்பட்டு வருகிறது. இதனால் பாகிஸ்தானில் அசாதாரண நிலை உருவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 14 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
