இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் புதிய 'வழக்கு கண்காணிப்பு முறைமை' ஆரம்பம்
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் புதிய 'வழக்கு கண்காணிப்பு முறைமை' நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தத் திட்டம், நிறுவனத்தின் நிர்வாகத் திறனை நவீனமயமாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இலக்கு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் வழக்குப் பதிவுகள், கோப்புகள் மற்றும் தகவல் ஓட்டத்தை மிகவும் திறமையாகவும், வெளிப்படையாகவும், பொறுப்புக்கூறலுடனும் நிர்வகிப்பதே இதன் இலக்காகும்.
தானியங்கி செயல்பாடு, நிகழ்நேர வழக்கு கண்காணிப்பு, தரவு அடிப்படையிலான முடிவெடுக்கும் திறன் மற்றும் மேம்பட்ட செயல்திறன் ஆகியவை இதன் முக்கியப் பலன்களாகும்.
ஜப்பான் நிதி உதவி
இந்தத் திட்டத்துக்கு ஜப்பான் அரசாங்கம் நிதி உதவியை வழங்கியுள்ளதுடன், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNDP) தொழில்நுட்ப ரீதியிலான பங்களிப்பை வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




