யாழில் நடைபெற்ற அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு பூஜை வழிபாடுகள்
இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு பூஜை வழிபாடுகள் இன்றையதினம்(5) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இலங்கை திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த முழுநீள திரைப்படமாக இது காணப்படுகிறது.
முழுநீள திரைப்படம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களை உள்ளடக்கி இந்த
திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.
நிகழ்வில் கலைஞர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் நடைபெற்று பின்னர் சம்பிரதாயபூர்வமாக படப்பிடிப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.
பூஜை வழிபாடுகள்
இதில் லங்காசிறி, ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனும் கலந்துகொண்டார்.
தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன், கதாநாயகி, ஏனைய நடிகர்கள், திரைப்படம் சார்ந்து பணியாற்றும் ஏனையோர், பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த புலம்பெயர் தமிழர்களும் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





