வெளிநாடொன்றில் கொடூரமாக அடித்து துன்புறுத்தப்பட்டுள்ள இலங்கை பெண்! வெளியான அதிர்ச்சி தகவல்
குவைத்தில் சுமார் 4 வருடங்களாக வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த இலங்கை பெண் ஒருவர் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளானதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் குவைத் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கியை வைத்து மிரட்டல்
குவைத்தில் குறித்த வீட்டின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது இரண்டு மகன்களால், உடல் மற்றும் தலையில் தாக்கப்பட்டதால் தான் பலத்த காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
வீட்டின் உரிமையாளர்கள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தன்னை அடித்து துன்புறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி தாக்குதலுக்குள்ளானதை எந்த வகையிலும் பொலிஸாரிடம் சொல்ல வேண்டாம் என்று கூறியதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
பெண் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
பின்னர் வாகனத்தில் ஏற்றிச்சென்று ஓரிடத்தில் தன்னை கைவிட்டுச் சென்றதாகவும் தாக்குதலுக்கு உள்ளான பெண் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் இலங்கை நண்பர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகமோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறித்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri
