பண்டோரா ஆவணங்களில் சிக்கிய மற்றுமொரு இலங்கைத் தமிழர்
வெளியிடப்படாத சொத்துக்களைப் பெற்ற பல நபர்களின் விபரங்களை வெளிப்படுத்திய பண்டோரா ஆவணங்களில் மற்றுமொரு இலங்கைத் தமிழர் பற்றிய விபரங்கள் கசிந்துள்ளன.
இலங்கையில் பதவியிலிருந்த இரண்டு ஜனாதிபதிகள் மற்றும் ஒரு பிரதமரின் ஆலோசகராக இருந்த இராமலிங்கம் பாஸ்கரலிங்கம் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் (BVI) பதிவுசெய்யப்பட்ட ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமான சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனம் மூலம் நிறுவனத்திற்கு இராமலிங்கம் பாஸ்கரலிங்கம், ஹொரைசன் கொலிஜ் ஒஃப் பிசினஸ் அண்ட் டெக்னோலஜி (HCBT) நிறுவனத்தின் மூலம் நிதியளித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம், ஜனவரி 2008 இல் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது.
இதுதவிர, தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து, இங்கிலாந்தில் சொத்து வாங்கியுள்ளார்.
சர்வதேச ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ) தலைமையிலான பண்டோரா ஆவணங்கள் மூலம் இது முதல் முறையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதன்படி, பண்டோரா ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் மூன்றாவது இலங்கையர் இவர். முன்னதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிரூபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருகுமார் நடேசன் ஆகியோரின் பெயர்களும் பண்டோரா ஆவணங்களில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam