தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் இன்னுமொருவர் கைது
இலங்கை தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின்(Keheliya Rambukwella) பதவிக் காலத்தில் நடைபெற்ற மனித பாவனைக்குதவாத மனித இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பில இலங்கை தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான மருத்துவர் விஜித் குணசேகரவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட விசாரணை
தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பில் இன்று(08) காலை தொடக்கம் சுமார் பத்து மணிநேரம் அளவில் அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் நீண்ட விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தனர்.
அதன் முடிவில் குறித்த சம்பவத்துடன் இலங்கை தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியானமருத்துவர் விஜித் குணசேகரவுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பகமான சாட்சியங்கள் கிடைத்திருந்த நிலையில் அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மருத்துவர் விஜிக் குணசேகரவை நாளை மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam
