மற்றுமொரு பாரிய நிதி மோசடி அம்பலம்! வெளியாகியுள்ள உண்மைகள் தொடர்பில் பொலிஸார் அறிவிப்பு
மற்றுமொரு பாரிய நிதி மோசடி தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, கிரிப்டோகரன்சி முறையில் நடத்தப்பட்ட பெரும் நிதி மோசடி குறித்த தகவல்களை வெளிக்கொண்டு வர முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊடகவியலார் சந்திப்பின் போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இது தொடர்பான விளக்கங்களை வழங்கியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் பெண்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து இந்த உண்மைகள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஸ்பாட் செயின் எனப்படும் பிரமிட் வகை நிதி மோசடி குறித்து முறைப்பாடுகள் வந்ததாகவும், இந்த வியாபாரம் தொடர்பான விசாரணையில், கீர்த்தி பண்டார என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த நபர் ஷாங்காய் என்ற சீன ஆணுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவருடைய காதலி வான் என்ற பெண் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
குறித்த மூவரும் சேர்ந்து இந்தத் தொழிலை நடத்தியுள்ளதுடன், இரண்டு சீன பிரஜைகளும் செப்டம்பர் 12 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறவிருந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
