கோப் குழுவில் அம்பலமான மற்றுமொரு பாரிய நிதி மோசடி!
இலங்கை துறைமுக அதிகாரசபையின் உத்தரவாதத்தின் பேரில், ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக மேலாண்மை நிறுவனத்தால் 2014 ஆம் ஆண்டு பெறப்பட்ட 24 மில்லியன் டொலர் கடன் தொகை தொடர்பில் கேப் குழுவில் பல உண்மைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி 2023 ஆம் ஆண்டு வரை 18.82 மில்லியன் டொலர்கள் (ரூ. 6,836 மில்லியன்) திருப்பிச் செலுத்தப்படவில்லை என்பது பொது நிறுவனங்கள் குழுவில் (COPE) தெரியவந்துள்ளது.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தற்போதைய செயல்திறனை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன.
தனியார் வங்கி கடன்
மேலும், சம்பந்தப்பட்ட தனியார் வங்கி, கடனை திரும்பப் பெறுவதற்காக மாகம்புர துறைமுக நிறுவனம் மற்றும் துறைமுக அதிகாரசபை மீது இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது இதன்போது தெரியவந்தது.
இந்தப் பரிவர்த்தனை தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஜூன் 2022 முதல் ஒரு கலைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் கலைப்பு நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அதிகாரிகளின் விளக்கங்களில் திருப்தி அடையாத கோப் தலைவர், நிறுவனத்தை மட்டும் கலைப்பதன் மூலம் துறைமுக அதிகாரசபை தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக துறைமுக அதிகாரசபை உடனடியாக உள் தணிக்கை நடத்தி, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, குழுவிடம் முழு அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோப் குழு பரிந்துரைத்துள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 10 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
