நானுஓயாவில் மற்றுமொரு லொறி குடைசாய்ந்து விபத்து
நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறியொன்று நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு (20) குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
அதிக செங்குத்தான சரிவுகள்
விபத்துக்குள்ளான லொறியின் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த வீதியில் அதிக செங்குத்தான சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால், தகுந்த தடையாளிகளை பாவித்து வாகனங்களை செலுத்த வேண்டும் என அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
